accident - 2026

தண்டவாளத்தில் விழுந்த விமானம்… அதிவிரைவாய் வந்த ட்ரெயின்..! பகீர் காட்சிகள்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
accident - 2026

தண்டவாளத்தில் விழுந்த விமானத்தில் இருந்து விமானியை நொடிப்பொழுதில் மீட்ட பொதுமக்கள். சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு நடந்த சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வெயிட்மேன் விமான நிலையத்தில் ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

அந்த விமானத்தில் விமானி ஒருவர் மட்டும் இருந்த நிலையில், கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென விமான நிலையத்துக்கு அருகில் சாலையின் நடுவே இருந்த ரெயில் தண்டவாளத்தில் விழுந்தது.

விமானம் ரெயில் தண்டவாளத்தில் விழுந்த விபத்தில் அதன் முன்பகுதி சிதைந்துபோனதால் விமானி அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்.

விபத்திலிருந்து விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், அவருக்கு ஏற்பட்ட பலத்த காயங்களால் அவரால் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேற முடியவில்லை.

இதற்கிடையில் விமானம் விழுந்த ரெயில் தண்டவாளத்தில் அதிவேக ரெயில் ஒன்று புயல்வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இதனால் விமான விபத்தில் உயிர் தப்பிய விமானி ரெயிலில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதைப்பார்த்து பதறிப்போய் விரைந்து செயல்பட்டு விமான இடிபாடுகளுக்குள் சிக்கிய விமானியை நொடிப்பொழுதில் வெளியே இழுத்து காப்பற்றினார்கள்.

விமானியை வெளியே இழுத்த அடுத்த சில நொடிகளில் அதிவேக ரெயில் தண்டவாளத்தில் கிடந்த விமானத்தின் மீது மோதிவிட்டு பறந்து சென்றது. இந்த மாறி காட்சிகள் எல்லாம் சினிமாவில் தான் சர்வ சாதரணமாக நடைபெறும்.

இப்படி சினிமா பாணியில் அரங்கேறிய இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியதால். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது.

https://twitter.com/LAPDHQ/status/1480363436311670784?ref_src=twsrc%5Etfw

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.