ரசாயன கலர் வடகம், சிப்ஸ்களால் நலிவடையும் அப்பளத் தொழிலைப் பாதுக்க அரசுக்கு கோரிக்கை!

appalam in madurai - 2026

கலர் வடகம், சிப்ஸ் போன்ற (கலர்)நிறமி, ரசாயன பொருட்களால்நலிவடைந்துவரும் அப்பளத் தொழிலை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரம்பரிய அப்பளத் தொழிலாளர் நலனை காக்க முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.உணவு தரக்கட்டுபாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணி, அனுப்பானடி, காமராஜபுரம், வில்லாபுரம், அவனியாபுரம், ஜெயந்திபுரம் பகுதிகளில் ஏராளமானோர் அப்பள தொழிலில் ஈடுபட்டு வருகினறனர்.தென் இந்தியர்களின் அருசுவை உணகளில் முக்கிய இடம் பெறுவது அப்பளம்தான்.

அந்த அப்பளம் தயாரிப்பில் தென் தமிழகத்தில் முன்னணியில் இருப்பது மதுரை மாவட்டம். இங்கு, சுமார் 60க்கும் மேற்பட்ட கம்பெனிகள், மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு உற்பத்தியாளர்கள்.

அப்பளத் தொழிலில் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில், பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்கள்தான் வேலை செய்கின்றனர்.உளுந்தை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும். அப்பளத்திற்கு தனி சுவை உண்டு.மேலும், உணவு தரக்கட்டுபாட்டு அமைப்பு மூலம் வழங்கப்படும்  தரசான்று பெறப்பட்ட பிறகே விற்பனைக்கு செல்கிறது.

உளுந்து மூடை 4,500 ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், இருந்து தயாரிக்கப்படும் அப்பளங்கள் கிலோ 120 முதல் 150 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது .

இந்நிலையில், தற்போது கடைகளில் விற்கப்படும் கலர் வடகங்கள்,சிப்ஸ் வகைகளில் அப்பத்தையும் சேர்ப்பதனால், சில குளறுபடிகள் ஏற்படுகிறது. சிப்ஸ்,வடகங்களில் கலர் சாயம் பூசப்படுகிறது. மற்றும் மைதா மாவு மூலப்பொருளாக கலக்கப்படுவதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது.மேலும், உணவு தரக்கட்டுபாட்டு சான்றிதழ் பெறப்படுவதில்லை.

கடந்த சில நாட்களாக வடகம், சிப்ஸ் வகைகளில் குடல் போன்ற உணவுப்பொருள் பயன்படுத்துவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக  செய்திகள் வெளிவந்ததை அடுத்து அப்பளம் விற்பனை சரிந்துள்ளது. மேலும், அப்பளம் உடல் நலத்திற்கு தீங்கானது என செய்திகள மக்களிடை பரவுகின்றது.

ஆகையால், இதற்கு உடனடியாக தமிழக அரசு தலையிட்டு உடனடியாக அப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள  தொழிலாளர்கள் நலனில் தீர்வு காண வேண்டும்.

கலர் சாயம், மற்றும் மைதா பொருட்களை தடைசெய்ய நடவடிக்கை எடுத்தால், பல தொழிலாளர்களின் வாழ்வு மலரும் என்று அப்பளத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த 2 வருடங்களாக கொரான பெருந்தொற்றால் நலிவடைந்த இந்த அப்பளத் தொழில் தற்போது, சீரடைந்துவரும் நிலையில் இது போன்ற தவறான செய்திகளால் மக்களிடையே அப்பளம் வாங்கும் எண்ணத்தை அழிக்கும் நிலை உள்ளது. 

ஆகையால்,  தமிழக முதல்வர், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஆகியோர் நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதரம் உயர வழிவகுக்க அப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories