snake rat - 2026

பாம்பை ஓட ஓட விரட்டும் எலி! வைரல் வீடியோ!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
snake rat - 2026

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இதில், ஒரு எலி, தனது குழந்தையாகிய குட்டி எலியைக் காப்பாற்ற ஒரு பெரிய விஷப்பாம்புடனும் போராடுகிறது. பார்ப்பவர்களை இறுதி வரை பார்க்க வைப்பதில் இந்த வீடியோ வெற்றி பெறுகிறது என்றுதான் கூற வேண்டும்.

சாலையோரத்தில் இருக்கும் பாம்பு (Snake Video) ஒன்று, ஒரு எலி குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வேகமாக செல்வதை வீடியோவில் காண முடிகின்றது. குட்டி எலியைக் காப்பாற்ற, தாய் எலி, பாம்பின் வாலை தொடர்ந்து தாக்குகிறது. அது பாம்பின் வாலை தொடர்ந்து கடிக்கிறது.

தாய் எலியின் உறுதிக்கு முன்னால் பாம்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, குட்டி எலியை விட்டுவிட்டு, பாம்பு திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடிக்கின்றது. எலி கடைசி வரை அந்த பாம்பை துரத்துகிறது. பாம்பு அங்கிருந்து சென்றது உறுதியானதும், அது தன் குழந்தையிடம் வந்து அதை வாயில் கவ்விக்கொண்டு தன் பொந்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை (Viral Video) இதுவரை 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

மனதை இளக வைக்கும் இந்த வீடியோவை, ஐஎஃப்எஸ் அதிகாரி சுரேந்திர மெஹ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோவின் தலைப்பில், அவர், “ஒவ்வொரு உயிரினமும் தனது இருப்பைக் காப்பாற்ற போராடுவது இயல்பு.” என்று எழுதியுள்ளார்.

https://twitter.com/surenmehra/status/1484753844555087878?ref_src=twsrc%5Etfw

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.