
சிறுவயதில் இருந்தே பன்முகத் திறமை கொண்டவராக இருந்து வருகிறார் பிரியதர்ஷனி. பிரியதர்ஷினி மிக சிறந்த ஆங்கராக வலம் வந்தவர். பிடி, டிடி இருவருக்கும் சுதர்ஷன் என்ற சகோதரர் இருக்கிறார். இவர் பைலட்டாக வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.
பிரியதர்ஷனி நடிப்பு மற்றும் டான்ஸிலும் ஈடுபாடு கொண்டவர். தமிழ் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பிரியதர்ஷனி.
சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். மானட மயிலாட ஷோவில் பங்கேற்று நடன திறமையை வெளிப்படுத்தி விருது வாங்கி இருக்கிறார்.
விஜய் டிவி-யில் சீனியர் ஆங்கராக இருந்து வரும் டிடி-யின் திருமண வாழ்க்கை இனிமையாக செல்லாமல் விவாகரத்து ஆன நிலையில் பிரியதர்ஷினியின் திருமண வாழ்வு மிகவும் இனிமையாக சென்று கொண்டிருக்கிறது.
அக்கா மற்றும் தங்கையான பிரியதர்ஷனி மற்றும் திவ்யதர்ஷினி இருவருமே சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குமே ரசிகர் வட்டம் மிக அதிகம்.
இவர் நாகம், நாகதேவதா (தெலுங்கு), குற்றவாளிகள், உயிரே உனக்காக, இதயத்தை திருடாதே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். நடனத்தில் ஆர்வம் மிகுந்த பிரியதர்ஷினி சுமார் 15 வருடங்கள் குரு மதுரை ஆர்.முரளிதரன் மற்றும் மணிமேகலை ஆகியோரிடம் பரதநாட்டியம் கற்று கொண்டவர் ஆவார்.
இது மட்டுமின்றி குரு கல்யாணியிடம் குச்சிப்புடி நடனத்தையும், குரு ஜிக்யாசா கிரி என்பவரிடம் கதகளியையும் கற்று கொண்டார். கோலங்கள் மற்றும் ரேகா ஐபிஎஸ் போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.
நடனம், நடிப்பு என இரண்டிலும் கொண்ட திறமையால், சன் டிவி, விஜய் டிவி போன்ற முன்னணி டிவி சேனல்களில் முக்கிய ஆங்கர் மற்றும் சீரியல் நடிகையாக விளங்கி வருகிறார்.
பிரியதர்ஷினிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகள் பேச தெரியும். அவர் பல டிவி மற்றும் ஸ்டேஜ் ஷோக்களை கலகலப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இவர் ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கணவர் ரமணாவுடன் பிரியதர்ஷினி இருக்கும் போட்டோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது கணவர் மற்றும் மகனுடன் பிரியதர்ஷினி இருக்கும் போட்டோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்களின் அபிமானம் பெற்ற பிரியதர்ஷினியின் மகன் அவரது தந்தைக்கு இணையான உயரத்தில் தாடியுடன் தோற்றமளிக்கிறார் அந்த போட்டோவில்.
இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை மற்றும் ஆங்கர் பிரியதர்ஷினிக்கு தோளுக்கு மேல் வளர்ந்த இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று வியப்புடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CVjmlLovYAb/?utm_source=ig_embed&utm_campaign=loading