குடியரசு தினத்தில் அறிமுகமான இந்தியாவின் இன்ஸ்டா..!

pepul - 2026

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தனியுரிமை பாதுகாப்பு கொண்ட சமூக ஊடக சேவையான Pepul சேவை பொதுமக்களுக்கு டிஜிட்டல் முறையில் இந்திய குடியரசு தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிபுல்’ (Pepul) அறிமுக விழாவில் நிறுவனர், சி.இ.ஓ, ஜி.சுரேஷ் குமார், முன்னணி முதலீட்டாளர் ஹவர்கிளாஸ் வென்ச்சர் பாட்னர்சின் கான்ஸ் சுப்பிரமணியன், ரவி சுப்பிரமணியன் மற்றும் பிரெஷ் வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம், பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் சர்மா உள்ளிட்ட முக்கிய முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவின் இண்ஸ்டாகிராம் என வர்ணிக்கப்படும்’பிபுல்’ செயலி ஆப்ஸ்டோர் மற்றும் பிளேஸ்டோரில் அறிமுகம் ஆகியுள்ளது.

டிஜிட்டல் அறிமுக விழாவில், இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோர் மற்றும் நிறுவனர்கள் பங்கேற்றனர்.

பயனாளிகளின் பிரைவசி பாதுகாப்பில் கவனம் செலுத்தும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சமூக ஊடக சேவையான Pepul, 2021 ஜூன் மாதம் தேர்ந்தெடுத்த பயனாளிகளுக்கு முன்னோட்ட வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த பயனாளிகள் செயலிக்கான இணைய சமூகமாகவும் உருவாகினர்.
எழுத்து வடிவில் பகிர்வுடன், புகைப்படம், வீடியோ சார்ந்த கதைகளை பகிரவும் இந்த செயலி வழி செய்கிறது.

மேலும், ‘Pepul Moments’, ‘Pepul chat’ ஆதார் வெரிபிகேஷன் உள்ளிட்ட முக்கிய அம்சங்களையும் அறிமுகம் செய்கிறது.

நிறுவனம் அண்மையில், 1.5 மில்லியன் விதி நிதி திரட்டியதாக அறிவித்தது. இந்த நிதியை, சேவையின் உள்கட்டமைப்பு வசதி, அணி விரிவாக்கம், பயனாளிகள் விரிவாக்கம் ஆகியவற்றுக்காக பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய குடியரசு தினத்தில் முழு வீச்சிலான செயலியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடியோ கதைகள், Pepul business உள்ளிட்ட புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்ய உள்ள செயலி, பயனாளிகள் நட்பான அம்சத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தும் எனத் தெரிவித்துள்ளது.

சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஹவர்கிளாச் வென்ச்சர் பாட்னர்ஸ், இந்தியா இம்பேக்ட் நிதியை துவக்கிய நிலையில், பிபுல் செயலியில் முதல் முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம், பல மொழி பேசும் மக்களுக்கு ஏற்ற சொந்த சமூக ஊடக சேவை தேவை எனும் நிலையில் பிபுல் செயலி அமைந்துள்ளதாக, ஹவர்கிளாஸ் வென்ச்சர் பார்ட்னர்சின் கான்ஸ் சுப்பிரமணியன், ரவி சுப்பிரமணியன் கூறியுள்ளனர்.

“பிபுல் செயலியை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்வதாகவும், ஹவர்கிளாஸ் வென்ச்சர் பாட்னர்ஸ், முன்னோடி நிறுவனர்கள் கிரிஷ் மாத்ருபூதம், விஜய்சேகர் சர்மா ஆகியோரின் ஆதரவை பெற்றுள்ளது குறித்து மகிழ்வதாகவும்,” நிறுவனர் சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

“இந்தியாவில் இருந்து உலகிற்கான பாதுகாப்பான, நேர்நிறக் சமூக ஊடக சேவையை உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories