Icecream புட்டு! வைரலாகும் புட்டும், வீடியோவும்..!

Published:

icecream puttu - 2026

தென்னிந்தியாவில் தமிழக மற்றும் கேரள காலை உணவுகளில் அதிகம் இடம் பெறும் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது புட்டு. நம்மூருல இட்லி தட்டுல போட்டு வேக வைக்க, கேரள மக்களோ குழாய்புட்டு செஞ்சு அசத்துவாங்க.

அதுல ஒரு புதுமைய செய்றேன்னும் மக்கள் கெளம்பியிருப்பது ஒரு ருசிகரமான ஆபத்து என்றே சொல்லலாம்.

புட்டு சட்டியில் அரிசி மாவு போடுவதற்கு பதிலாக ஐஸ்க்ரீமையும், இடையில் நிரப்ப தேங்காய் தூவலுக்கு பதிலாக கார்ஃப்ளேக்ஸ் மற்றும் சாக்கோசிப்களையும் பயன்படுத்தி இந்த புட்டு ஐஸ்க்ரீம் செஞ்சு தர்றாங்க.

Foodie World என்று அழைக்கப்படும் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் நடத்தும் யூடியூப் சேனலில் புட்டு ஐஸ்க்ரீம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் பலூடா என்ற உணவகம் கேரளாவில் தாங்கள் வைத்துள்ள 11 கிளைகளில் இந்த புட்டு ஐஸ்க்ரீமை விற்பனை செய்து வருகின்றனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இந்த ஐட்டம் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மக்கள் இதனை தேடி வந்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர் என்று பலூடாவின் ஸ்டோர் மேனர் ஒருவர் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img