கருவுற்ற பெண்களுக்கு வேலை இல்லை.. வங்கியின் அறிவிப்பால் அதிர்ச்சி!

sbi - 2026

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கி டிசம்பரில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் உள்ள தேசிய அமைப்புக்கள், மாதர் இயக்கங்கள் , தொழிற்சங்கங்கள் பெரும் கண்டனக்குரல் எழுப்பியுள்ளது.

இந்தியா முழுவதும் 62000 பெண் ஊழியர்கள் பணிபுரியும் ஒரு தேசிய வங்கியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது எனத் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு எதிரான” எஸ்பிஐ வழிகாட்டுதல்களை திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) கோரியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, சமீபத்திய சுற்றறிக்கையில், கர்ப்பிணிப் பெண்களை நியமனம் செய்வது தொடர்பான வழிகாட்டுதலைத் திருத்தியுள்ளது.

திருத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி, மூன்று மாதங்கள் மற்றும் அதற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் தேர்வர்கள் தற்காலிகமாக தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் மற்றும் குழந்தை பிறந்த நான்கு மாதங்களுக்குள் பணிக்கு சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த வழிகாட்டுதலில், ஆறு மாத காலம் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்கள், வங்கியில் வேலை செய்வது கருவின் வளர்ச்சியில் எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என்று தகுந்த மருத்துவரின் சான்றிதழ் சமிர்பித்தால் பணியில் அமர்ந்தலாம் என்று கூறியது.

இதில் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது பல்வேறு தரப்பில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் “கர்ப்பிணிப் பெண்களுக்கான நியமனம் தொடர்பான அறிவுறுத்தலை எஸ்பிஐ திருத்தியுள்ளது.

3 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பணியில் நியமிக்கப்பட மாட்டார்கள். பிரசவம் முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகுதான் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த திருத்தப்பட்ட வழிக்காட்டுதல் பாகுப்பாடு நிறைந்தது என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2009 இல் ஸ்டேட் பேங்க் அதன் உள்ளூர் தலைமை அலுவலகங்களுக்கு பெண்களுக்கு உடனடியாக பணி நியமனம் அல்லது பதவி உயர்வுக்காக கர்ப்பத்தை ஒரு ஊனமாக கருதக்கூடாது என்பதற்கான வழிமுறைகளை வழங்கியது என்று AIDWA யின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா கூறுகிறார்.

மேலும் அப்போது அந்த அறிவிப்பு வருவதற்கு, கேரளத்தை சேர்ந்த சில பெண்கள் அமைப்புகள் போராட்டம் மற்றும் அப்போதைய கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றின் விளைவாக அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவிக்கிறார்.

SBI - 2026

பணி நியமனம் மற்றும் பணி உயர்வு நேரத்தில் பெண் பணியாளர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதைத் தீர்மானிக்கவும், கர்ப்ப காலத்தில் பணி நியமனம், பதவி உயர்வு போன்றவற்றை தள்ளிப்போடும் வகையில் அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் விவரங்கள் அடங்கிய அறிவிப்பைச் சமர்ப்பிக்கவும் எஸ்.பி.ஐ வலியுறுத்தியது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பெண் ஊழியர்கள் தங்கள் மாதவிடாய் விவரங்களை அறிவிக்க வேண்டும் எனவும் கருப்பை, மார்பகம் தொடர்பான நோய்பாதிப்பு குறித்தும் எந்தவொரு ஆதாரத்திலும் உறுதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் எஸ்.பி,ஐ யானது, கருவில் எந்தவொரு பாதிப்பு ஏற்படாது என்று சிறப்பு மகளிர் மருத்துவ நிபுணரின் சான்றிதழை அளித்தால், அத்தகைய தனிப்பட்ட விவரங்கள் இல்லாமல், பெண்கள் கருவுற்ற ஆறாவது மாதம் வரை பணியமர்த்துவது என்று முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories