December 6, 2025, 9:35 AM
26.8 C
Chennai

பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்கும் மெட்டா! இனி கவலை வேண்டாம்!

meta - 2025

உலகில் உள்ள அனைவரையும் இணைக்கும் ஒரு அற்புதமான செயலியாக “பேஸ்புக்” உள்ளது. இதன் மூலம் நம்மால் நல்ல பயனுள்ள கருத்துக்களை பகிரவும், தெரிந்து கொள்ளவும் முடியும்.

அதேசமயம் இந்த பேஸ்புக்கில் ஆபத்தும் உள்ளது. அதாவது இந்த செயலி மூலம் மற்றவர்கள் நம்மை உளவு பார்க்க வாய்ப்புள்ளது.

எனவே பேஸ்புக் பயனாளர்கள் இந்த செயலியை முழு மனநிறைவுடன் பயன்படுத்த முடிவதில்லை. இந்த நிலையில் பயனாளர்களின் நலன் கருதி ஃபேஸ்புக் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது.

அதாவது பிறரால் உளவு பார்க்க முடியாத அளவிற்கு பேஸ்புக் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் குறுஞ்செய்தியை யாரும் ( பேஸ்புக் உட்பட ) உளவு பார்க்காத வண்ணம் “என்கிரிப்ட்” செய்யப்படும்.

இந்த E2EE ஒரு முக்கியமான மற்றும் பாதுகாப்பு வசதியாகும், இந்த வசதியானது ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே முன்பு கிடைத்த நிலையில் தற்போது மெசஞ்சரைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இது கிடைக்கப்போகிறது.

ஆனால் இது default ஆக இயங்காமல் நாம் அந்த வசதியை on செய்தால் மட்டுமே இந்த End-to-End encryption வசதியை chatகளில் நாம் பெறமுடியும்.

இந்நிறுவனம் Facebook மெசஞ்சரின் opt-in end-to-end encrypted செய்யப்பட்ட chat களுக்கு கூடுதலாக ஒரு அட்டகாசமான அம்சத்தையும் வழங்க இருக்கிறது.

அதாவது ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாகவும் இதில் வசதி அமைந்துள்ளது. இனிமேல் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டால் பேஸ்புக் மெசஞ்சர் பயனர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் இந்த அம்சம் வரும் வாரங்களில் கிடைக்கும்.

end-to-end encrypted வசதி இல்லையென்றாலும் கூடுதலான சில அம்சங்களை இனிமேல் பெறலாம். இதில் GIFகள், ஸ்டிக்கர்கள் மற்றும் ரியாக்ஷன்ஸ் மற்றும் குறிப்பிட்ட சில மெஸேஜுக்கு மட்டும் பதிலளிக்கும் வசதி போன்றவற்றையும் வழங்குகிறது.

மேலும் அப்டேட் செய்வதன் மூலம் மெசேஜை forward செய்வதிலும் புது வசதியையும் பெறலாம். forward செய்யவேண்டியதை தேர்ந்தெடுத்த பின் ஒரு நபருக்கோ அல்லது பலருக்கோ அல்லது குழுவிற்கோ அனுப்பலாம், புதிய குழுவை கூட நீங்கள் உருவாக்கி forward செய்யலாம்.

மேலும் end-to-end encrypted chatகளில் உண்மையான கணக்குளை அறியும் பொருட்டு Verified badge-கள் காண்பிக்கப்படும். இதில் மீடியாக்களை எளிதாக சேமிக்கும் வகையில் அதனை long-press செய்தால் போதும், வேண்டிய மீடியாவை சேமித்துக்கொள்ளலாம்.

அதேபோல நம் புகைப்படங்கள் அல்லது வீடியோவை மற்றவருக்கு அனுப்பும்போது அதனை நாம் எடிட் செய்து அனுப்பிக்கொள்ளலாம். அதன்மூலம் stickers, scribbling, adding text, crop, audio போன்ற எடிட்டிங் வசதிகளை செய்துகொள்ளலாம்.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘ எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் வசதியை பயன்படுத்தி நீங்கள் பாதுகாப்பாக உணருவது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே யாராவது ரகசிய உரையாடலை ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories