மேடையில் நண்பர்கள் செய்த வேலை..! கடுப்பான மணமகன்!

Published:

marriage 1 - 2026

திருமண நிகழ்ச்சிகளில் பொதுவாகவே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும். அதில் பலரும் அவ்வாறு திருமணங்களில் நடக்கும் சில வேடிக்கையான தருணங்களை பதிவு செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இப்போதெல்லாம் திருமணங்களின் (Marriage) போது மணமக்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மேடையில் ஏறி நடனமாடும் கலாச்சாரம் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே மாறிவிட்டது எனலாம். அவர்களுடன் இணைந்து மணமக்களும் நடனமாடி உற்சாகம் அடைகின்றனர்.

அந்த உற்சாகத்தில் சில பல்ப் வாங்கும் சம்பவங்களும் சிலருக்கு நடந்து அது இணையவாசிகளை வெகு விரைவாக கவர்ந்து ட்ரெண்டாகி விடுகிறது.

அதுபோல ஒரு திருமண விழாவில் நடந்த சம்பவம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இன்ஸ்டாகிராமில் (Instagram) divusharma _ 9 என்ற கணக்கில் அந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில், மேடையில் மணமக்கள் அவர்கள் சோபாவில் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது அவரது நண்பர்கள் இருவர் தனது கைகளில் கரன்சி நோட்டுகளை சீட்டுக்கட்டு போல் அடுக்கி வைத்துக்கொண்டு அதனை ஒவ்வொன்றாக மணமக்களின் மீது வீசுகின்றனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அவ்வாறு ஒருவர் பணத்தை வீசிக்கொண்டிருக்க, மற்றொருவர் பணத்தை வீசிவிட்டு மணமகன் அமர்ந்திருக்கும் சோபாவின் கைப்பிடிப்பியில் அமர முற்படும்போது தடுமாறி மணமகனின் மடியில் விழுந்து விடுகிறார்.

இதனை கண்ட மணமகள் சிரிக்க, கடுப்பான மணமகன் அவரது நண்பரை அங்கிருந்து செல்லுமாறு கூறுகிறார்.

இந்த வீடியோ 152,995 லைக்குகளை பெற்று இணையவாசிகள் பலரையும் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் சிரிப்பு எமோஜிகளையும், நெருப்பு எமோஜிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img