annamalai bjp jeyakumar - 2026

ஆலமரத்தின் நிழலில் ஏதாவது முளைக்குமா?! ஜெயக்குமாருக்கு சமூகத்தள வாசிகள் கேள்வி!

சற்றுமுன் Featured அடடே... அப்படியா? புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
annamalai bjp jeyakumar - 2026

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்ல் தனித்துப் போட்டியிடுவதாக பாஜக., அறிவித்துள்ளது. பஜாக.,வின் இந்த அறிவிப்புக்கு கூட்டணிக் கட்சியான அதிமுக., சார்பில் பதில் அளிக்கப் பட்டுள்ளது.

பாஜக.,வின் தனித்துப் போட்டி என்ற முடிவு குறித்து கருத்து தெரிவித்த அதிமுக.,வின் ஜெயக்குமார், தனித்துப் போடியிடுவது என்பது பாஜக., எடுத்த முடிவு என்றார்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக., தனித்துப் போட்டியிடுவது என்பது அக்கட்சி எடுத்த முடிவு! அதிமுக., ஆலமரம். இந்த ஆலமரத்தின் நிழலில் எத்தனையோ கட்சிகள் பலனடைந்துள்ளன. தனித்தன்மையோடு பல தேர்தல்களை சந்தித்துள்ளோம். அதை இந்தத் தேர்தலில் தொடருவோம் என்று குறிப்பிட்டார்.

ஆனால், ஆலமரத்தின் நிழலில் சிறு புல் பூண்டுகூட முளைக்காது என்பது அறிவியல் உண்மை. இதில், ஆலமரத்தின் நிழலில் மற்ற கட்சிகள் பலன் அடைந்துள்ளதாம்! என்னே அதிமுக.,காரர்களின் அறிவு என்று சமூகத் தளங்களில் கிண்டலும் கேலியும் செய்து வருகின்றனர் சிலர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.