snake - 2026

அது பாம்பா என்னது..? மூட்டைய கொட்டி துளாவும் நபர்!

சற்றுமுன் அடடே... அப்படியா?
snake - 2026

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.

சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பொதுவாக ஒருவர் பாம்பை பார்த்தால், அந்த இடத்தில் இருந்து பதறி அடித்துக்கொண்டு ஓடி விடுவதுதான் வழக்கம்.

பாம்பைக் கண்டு பதறாதவர்களும் இருப்பார்களா? தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் இந்த வீடியோ நிச்சயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

ஒரு நபர் சுமார் 300 பாம்புகளை ஒரு சாக்கு மூட்டையில் கொண்டு வந்து காட்டில் விடுவதை வீடியோவில் காண முடிகின்றது.

ஒரே இடத்தில் இத்தனை பாம்புகளை பார்ப்பது நம்மை அச்சத்தில் தான் ஆழ்த்துகிறது. இந்த வீடியோவைப் பார்த்து இணைய வாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பச்சை வண்ண சாக்கு மூட்டையுடன் ஒருவர் காட்டுக்குள் செல்வதை காணமுடிகிறது.

அந்த சாக்கில் அதிக அளவில் பாம்புகள் உள்ளன. அந்த நபர் சாக்குப்பையை தரையை நோக்கி திருப்பி அனைத்து பாம்புகளையும் வெளியே விடுகிறார்.

அதுமட்டுமின்றி, கயிறுகளை துளாவுவதுபோல், அவர் பாம்புகளை (Snake Video) துளாவி, அவற்றைப் பிடித்து காட்டில் விடுகிறார். இறுதியில், இரு கைகளையும் கூப்பி வணக்கமும் செலுத்துகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தக் காணொளியை யார் பார்த்தாலும், அவர்களுக்கு சிலிர்த்துதான் போகும். இந்த வீடியோ memewalanews என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 300 பாம்புகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் பக்காவாக ரியாக்ட் செய்து வருகின்றனர். பல விதமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் இல்லை. ஆனால் தற்போது இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.