ரிடிசைன் செய்யப்பட்ட வீடியோ பிளேயரை அறிமுகம் செய்த யூடியூப்!

YouTube - 2026

கூகுள் நிறுவனத்தின் ஆன்லைன் வீடியோ ஷேரிங் மற்றும் சமூக வலைத்தளமான யூடியூப், தனது மொபைல் வெர்ஷனில், புதிதாக ரிடிசைன் செய்யப்பட்ட வீடியோ பிளேயரை அறிமுகம் செய்துள்ளது

இந்த பிளேயரில் உள்ள புதிய பட்டன்கள், பயனாளர்களின் அணுகுமுறை எளிதாகிறது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், வீடியோ பூல் ஸ்கீரின் மோடில் பார்க்கும்போதும், பட்டன்கள் தோன்றும் வகையில் வடிவைத்துள்ளனர்.

வீடியோ பார்க்கையில் Pause அல்லது Tap செய்தால் மட்டுமே பட்டன் திரையில் தோன்றும். இல்லையெனில், மறைந்திருக்கும் வகையில் டிசைன் செய்துள்ளனர்.

முக்கியம்சமாக லைக் மற்றும் டிஸ்லைக் பட்டனும், ரைட் சைட்டிலிருந்து ஸ்மால் சைட்பாரில் கமெண்ட்ஸ் ஓப்பனாகி படிக்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக, வீடியோவை ஷேர் செய்திட தனி பட்டனும், பிளேலிஸ்டில் Save பட்டனும், கீழவே வலது பக்கம் ஒரத்தில் பல வீடியோக்களை காண தனி வசதி கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து வசதிகளும் ஏற்கனவே யூடியூப் தளத்தில் இருந்தாலும், அவற்றை செய்திட Full Screen வீடியோ மோடை Exit கொடுத்து தான் செய்ய முடியும். ஆனால், தற்போதைய புதிய பிளேயரில் Full Screen-இல் இருந்தப்படியே அவற்றை அணுகும் வசதி கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பிரத்யேக வீடியோ பிளேயர், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களுக்கு கிடைக்கவுள்ளது. ஆனால், அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வெளியாகவில்லை. அதாவது, இந்த அப்டேட் அனைவருக்கும் கிடைத்திட, சிறிது நாள்கள் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இதுதவிர, யூடியூப் நிறுவனம் புதிதாக looping வசதியை சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்தால், வீடியோஸை மீண்டும் பார்த்திட பிளேபேக் ஸ்லைடரை நகர்த்த வேண்டிய அவசியம் இருக்காது. தானாகவே வீடியோ Loop செய்யப்பட்டு பிளேயரில் பார்த்திட முடியும்.

யூடியூப் தளத்திற்கு கோடிக்கணக்கில் பயனாளர்கள் இருப்பதால், புதிய அப்டேட் பயனாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories