இந்தியாவுக்கு எதிராக ஜிஹாதிகளை முடுக்கி விடும் பாகிஸ்தான்: அமெரிக்க அறிக்கை!

pakistan - 2026

பொருளாதார நெருக்கடி, பாதுகாப்பு நெருக்கடி என பாகிஸ்தான் பலவித நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் அமைதியை பாகிஸ்தானால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால், அந்த நாடு மீண்டும் சதி செய்ய ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் வெறுப்பை பரப்புவதற்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும், தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும் பாகிஸ்தான் தனது வியூகத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது.

அமைதியைக் குலைக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான ஜிஹாதி நடவடிக்கைகளை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது.

பாகிஸ்தான் இப்போது மீண்டும் அதன் பழைய உத்தியைப் பின்பற்றி, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிடத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க (America) திங்க் டாங்க் குழுவான ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டின் அறிக்கையின்படி, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகள், பல தசாப்தங்களாக ஜிஹாதிகள் மற்றும் காலிஸ்தானி குழுக்களுக்கு ஆதரவளித்து வருகின்றது.

இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் தற்போது முடுக்கிவிட்டுள்ளது இந்தியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுக்கு கவலையளிக்கும் விஷயமாகும்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த கைதுகள் இந்தியாவில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு இஸ்லாமாபாத் அளித்திருக்கும் ஆதரவை எடுத்துக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பரில், லூதியானா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நடத்தியதற்காக ஜஸ்விந்தர் சிங் முல்தானி ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார்.

இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதிகள்தான் காரணம் என்று இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டியதாகவும், முல்தானிதான் இந்தத் தாக்குதலின் சூத்திரதாரியாக செயல்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறியது.

முல்தானிக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும், எல்லையில் இருந்து பஞ்சாபிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்துவதில் அவன் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஹட்சன் இன்ஸ்டிடியூட் படி, ஜஸ்விந்தர் சிங் முல்தானி நீதிக்கான சீக்கிய இயக்கத்தின் (SFJ) முக்கிய உறுப்பினர் என்று கூறப்படுகிறது.

SFJ இன் முக்கிய நபரான குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்த உண்மையை உறுதிப்படுத்தி, முல்தானியுடன் அவருக்கு இருக்கும் நெருக்கமான தொடர்பை வெளிப்படுத்தினார்.

‘ஜஸ்டிஸ் ஃபார் சிக்ஸ்’ அமைப்பை சேர்ந்தவர்கள், பல ஆண்டுகளாக, பாகிஸ்தான் பிரதமர், ரஷ்யா மற்றும் சீன அதிபர்களுக்கு, இந்தியாவுக்கு எதிராக தங்கள் ஆதரவைக் கோரி பொதுக் கடிதங்களை எழுதி வருகின்றனர்.

‘காலிஸ்தான் பிரச்சினை முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் அமெரிக்காவிற்குள் காலிஸ்தான் தொடர்பான இந்தியா எதிர்ப்பு செயல்பாடுகள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன.

இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.’ என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் முக்கிய நட்பு நாடாகக் கருதப்படும் பாகிஸ்தான் (Pakistan), இந்தியா-அமெரிக்க உறவுகளை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories