அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: முகப்பரு, தலைமுடி வளர, பனி வெடிப்பு..!

Published:

health tips - 2026

இருதய நோய் உள்ளவர்களுக்கு…

தினமும் இரவு இரண்டு சீமை அத்திப் பழங்களைப் பாவில் போட்டுக் காய்ச்சி குடித்து வர இருதயம் பலப்படும்.

முகப்பருவுக்கு…

சிறிது கருஞ்சீரகத்தை அம்மியில் வைத்து சிறிது எருமைப்பால் விட்டரைத்து பருக்களின் மீது போடலாம். கைவசம் கருஞ்சீரகம் இல்லா விடில் நல் சீரகத்தையும் பயன்படுத்தி சிறிது நேரம் ஊறிய பிறகு கழுவி வர பருக்கள் மறையும்.

பொட்டு வைத்த இடத்தில் அரிப்பா?

வில்வ மரக்கட்டையை சந்தனக் கல்வில் இழைத்து பொட்டு வைக்கும் இடத்தில் தடவி வர நல்ல குணம் தெரியும்.

பாதங்களில் உண்டாகும் பனி வெடிப்பிற்கு…

50 கிராம் நல்லெண்ணெயை நன்றாகப் புகை வரும்படி சூடு பண்ணி அதில் இரண்டு அங்குல நீளமுள்ள மெழுகுவர்த்தியை சீவிப் போட்டவுடன் கரைந்து விடும். இதனை வெடிப்பின் மீது தடவி வர வலி நீங்கி வெடிப்பும் மறையும்.

தலைமுடி வளர்…

வெங்காயச் சாறை தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்தால் பொடுகு, சிரங்கு நீங்கி தலை குளிர்ச்சி பெறும்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

டீத் தண்ணீரை தலையில் தேய்த்துக் குளிப்பதால் கூந்தல் நீண்டு வளரும்.

கறிவேப்பிவை துவையல். வெங்காயம், கீரை. பசும்பால். பூசணிக்காய் இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள முடி நன்கு கருமையாக இருக்கும்.

Related articles

Recent articles

spot_img