Drumstick rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முருங்கை காய் சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Drumstick rice - 2026

முருங்கை காய் சாதம்
தேவையான பொருட்கள்
உதிராக வடித்த சாதம் – 2 கப்,
நீளவாக்கில் நறுக்கிய முருங்கைக்காய் – 1,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு, அலங்கரிக்க கொத்தமல்லித்தழை – தேவைக்கு.

பொடிக்கு…

தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
தனியா – 1 டீஸ்பூன்.

அரைக்க…

நீளவாக்கில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா 1,
புளி – சுண்டைக்காய் அளவு.

தாளிக்க…

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 5 இலைகள்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – 1.

செய்முறை

பொடிக்கு கொடுத்ததை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியே வறுத்து பொடித்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் தக்காளி, வெங்காயத்தை தண்ணீர் வற்றும்வரை வதக்கி ஆறவைத்து, புளியுடன் சேர்த்து மிக்சியில் கெட்டியான விழுதாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, முருங்கைக்காய், அரைத்த பொடி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சாதம் போட்டு கிளறி அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.