Cumin Samba Lettuce Rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சீரக சம்பா கீரை சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Cumin Samba Lettuce Rice - 2026

சீரக சம்பா கீரை சாதம்
தேவையான பொருட்கள்
சீரக சம்பா – வடித்த சாதம் (ஒரு கப்)
எண்ணெய் – ஒரு தேகரண்டி
சீரகம் – அரை டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
கறிவேபில்லை – சிறிதளவு
இஞ்சி துருவல் – சிறிதளவு
தக்காளி – ஒன்று (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
அரை கீரை – அரை கப் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
வேக வைத்த துவரம் பருப்பு – கால் கப்

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு, இஞ்சி, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, கீரை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின், மிளகாய் தூள், துவரம் பருப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து சீரக சம்பா சாதம் சேர்த்து நன்றாக கிளறி இரண்டு நிமிடம் கழித்து பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.