இவ்வளவா.. ஸ்டெல்த் ஓமிக்ரான் அறிகுறிகள்!

omicron - 2026

BA.2 எனப்படும் stealth Omicron குறித்த அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய வகை ஓமிக்ரானின் அறிகுறிகள் குறித்த வல்லுநர்கள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தான் உலக நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தொடங்கி அனைத்து நாடுகளும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்னும் எந்தவொரு நாடும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. ஏனென்றால், கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பிரிட்டன், இந்தியா நாடுகளில் கண்டறியப்பட்ட ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகள் அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தியது.

இதேபோல கடந்த செப். மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிதாக ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டது. இது உலகெங்கும் அடுத்த அலையை ஏற்படுத்தியது.

இந்தியாவில் கூட கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி பாதிப்பு 3 லட்சம் வரை கூட சென்றது. அதன் பின்னர் இப்போது தான் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

இந்தச் சூழலில் பிரிட்டன் நாட்டில் ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து தற்போது புதிய வேரியண்ட் (sub-variant) கண்டறியப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BA.2 அல்லது stealth Omicron எனப்படும் இந்த உருமாறிய கொரோனாவில் உள்ள மாறுபாடுகள் ஓமிக்ரானை போல இல்லை என்பதால் இதைக் கண்டறிவது சிரமமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான BA.1 ஓமிக்ரானிலும் சரி, BA.2 ஓமிக்ரானிலும் சரி 32 ஸ்டிரெயின்கள் இருக்கிறது. இது தாண்டியும் கூட BA.2இல் கூடுதலாக 28 ஸ்டிரெயின்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், பொதுவாக BA.1 வகையில் ஓமிக்ரானில் எஸ் ஜீன் இருக்காது. இதனால் ஓமிக்ரான் பாதிப்பை PCR சோதனையில் எளிதாகக் கண்டறியலாம். ஆனால், இந்த BA.2 ஓமிக்ரானில் டெல்டா கொரோனாவை போல எஸ் ஜீன் உள்ளதால் இதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த புதுவகை ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் குறிப்பிட தகுந்த அளவு இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் பாதிப்பே ஏற்படுகிறது.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

மேலும், இது வேகமாகப் பரவலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த புதிய வகை ஓமிக்ரான் அறிகுறிகள் குறித்து ஆய்வாளர்கள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஒர்ஜினல் ஓமிக்ரான் போது இருந்தே அதே அறிகுறிகள் தான் பெரும்பாலும் இதற்கும் உள்ளது. தொண்டை கரகரப்பு தான் இந்த ஸ்டெல்த் கொரோனாவின் முக்கிய அறிகுறியாக உள்ளது.

மேலும், சிலருக்கு இருமல், மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், சோர்வு போன்ற அறிகுறிகளும் தெரிவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல மூக்கு ஒழுகுதல் தலைவலி, சோர்வு, தும்மல், உடல் வலி அறிகுறிகளும் பரவலாகக் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தசை அல்லது உடல் வலி மற்றும் தலைவலியும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலருக்கு குமட்டல் அல்லது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, பசியின்மை போன்ற அறிகுறிகளும் தென்படுகிறது.

உதடு மற்றும் நகப்பகுதிகளில் நிறம் மாறுவதும் ஓமிக்ரான் கொரோனாவின் அறிகுறியாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா கொரோனா சமயத்தில் பரவலாக இருந்த வாசனை மற்றும் சுவை இழப்பு ஸ்டெல்த் ஓமிக்ரான் கொரோனாவில் அதிகம் இல்லை.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான், ஒர்ஜினல் ஓமிக்ரானை காட்டிலும் வேகமாகப் பரவி வந்தாலும் கூட தீவிர பாதிப்பை எதுவும் ஏற்படுத்துவதில்லை என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories