பதைபதைக்க வைக்கும் வீடியோ: குட்டி பையன் எங்க நடக்கறான் பாருங்க..🙄!

Published:

boy - 2026

இணையத்தில் வெளியாகியிருக்கும் வீடியோவில் சிறுவன், வரிசையாக இருக்கும் கம்பிகளை பிடித்தவாறு நடக்கிறான்.

மிகச்சிறிய சுவரான அதில் கொஞ்சம் பிசகினாலும், சுமார் 100 அடிக்கு கீழாக இருக்கும் அணைக்குள் விழ நேரிடும். ஆனால் அதனை பொருட்படுத்த சிறுவன் அந்த சுவரில் தனியாக நடக்கிறான்.

இரண்டொரு இடங்களில் அந்த சிறுவன் கீழே விழுந்துவிடுமாறு செல்கிறான். பார்க்கும் அனைவருக்கும் அந்த இடம் நெஞ்சை உலுக்கிவிடும்.

ஏனென்றால், அணையில் இருந்து தண்ணீர் மிக வேகமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால், அந்த சிறுவன் தனியாக நடந்து வருவதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் வீடியோ எடுக்கிறார்.

ஆனால், அந்த சிறுவனை கம்பிக்கு இந்தப் பக்கம் எடுத்துவர முயற்சி செய்யவில்லை. வீடியோவைப் பார்க்கும் அனைவருக்கும் அந்த நபர் மீது கடும் கோபம் கூட வர வாய்ப்பிருக்கிறது.

இந்த இடத்தில் தான் மிகப்பெரிய டிவிஸ்ட். வீடியோ பார்ப்பவர்கள் அனைவரையும் முட்டாளாக்கும் சர்பிரைஸ் அது. அதாவது, அந்த வீடியோ ஒரிஜினல் இல்லை. வி.எப்.எக்ஸ் செய்யப்பட்டது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

வீட்டில் தடுப்புச் சுவர் ஓரமாக சிறுவன் நடந்து வருவதை படம்பிடித்து, வி.எப்.எக்ஸ் மூலம் மிகப்பெரிய அணை மீது நடத்து வருவது போல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த உண்மை சில நொடிகளுக்குப் பிறகே உங்களுக்கு தெரியும். இதுவரை இந்த வீடியோவை சுமார் ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img