புஷ்பா பாடலுக்கு டான்ஸ் ஆடிய மணமக்கள்! வைரல்!

Published:

marriage 1 - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா: தி ரைஸ் திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த பாராட்டுகளை பெற்று வருகிறது. இதன் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

இந்த பாடல்களை பல பிரபலங்களும், பொதுமக்களும் தங்கள் பாணியில் பாடி ஆடி இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

புஷ்பா படம் மற்றும் பாடல்கள் மீதான மோகம் அதிகரித்துக்கொண்டே உள்ளது. புஷ்பா ஃபீவர் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.

மக்கள் ஸ்ரீவள்ளி, ஓ சொல்றியா மாமா, சாமி ஆகிய பாடல்களில் பல ரீமேக் வீடியோக்களை நாள்தோறும் உருவாக்கி வருகின்றன.

தற்போதும் ஒரு திருமண விழாவில், ஒரு ஜோடி, ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடக பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

வீடியோவில் காணப்படும் மணமகனும், மணமகளும் பாரம்பரிய மராட்டிய உடையை அணிந்திருப்பதைக் காண முடிகிறது. மாலை மாற்றும் சடங்கின் போது, இருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து அந்த பாடலின் துடிதுடிப்பான இசைக்கு ஏற்றவாறு நடனமாடுவதை வீடியோவில் காண்கிறோம்.

இந்த வீடியோ இணையவாசிகளை மிகவும் கவர்ந்துள்ளது. மணமகனும் மணமகளும் இந்த பாடலுக்கு நடனமாடும் போது, அவர்கள் உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சி முகத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மிகவும் சந்தோஷத்துடன் பாடலையும், நடனத்தையும் ரசித்து அவர்கள் ஆடுவதை நம்மால் காண முடிகின்றது.

இந்த வீடியோவை ChemistryStudios என்ற பக்கம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. ‘நாம் பார்த்த மணப்பெண்களிலேயே படு மாஸான மணப்பெண்’ என இந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

மணமகன் மணமகளின் இந்த துடிதுடிப்பான டான்ஸ் வீடியோ வைரலாகி உள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை 332,277 லைக்குகள் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

“வேற லெவல் நடனம்” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

“உங்கள் தோழியே உங்களுக்கு மனைவியாகும் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைத்தால், இப்படித்தான் மகிழ்ச்சி இருக்கும்” என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img