வலிமை: மாஸ்டர் படத்தின் வசூலை முதல் நாளே முறியடித்து சாதனை!

Published:

valimai ajith - 2026

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது.

அஜித் என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளது.

ajith5 - 2026

வலிமை படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்கி வேகவேகமாக ஹவுஸ்புல் ஆகி வருகிறது.

தற்போது ப்ரான்ஸில் மாஸ்டர் படத்தின் வசூலை முதல் நாளே வலிமை தாண்டியதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் புக் மை ஷோ என்ற டிக்கெட் புக் செய்யும் இணையதளத்தில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆர்வமாக இருப்பதாக 20 லட்சம் பேர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை எந்தவொரு தமிழ்ப் படத்துக்கும் இத்தனைப் பேர் ஆர்வம் தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img