marriage 4 - 2026

ஸ்வீட்டை வீசிய மணமகள்.. தண்ணீரைத் தட்டிய மணமகன்… திருமணத்தன்றே லடாய்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
marriage 4 - 2026

ஒவ்வொருவருக்கு திருமண நாள் என்பது வாழ்நாள் கனவு. அன்றைய நாளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் உணர்வுபூர்வமாகவும், மகிழ்ச்சியானதாகவும் அமைய வேண்டும் என ஆண், பெண் இருவருமே விரும்புவர்.

ஆனால் ஒரு மணமகள் தனது திருமண நாளில் செய்த காரியம் காலத்திற்கும் மணமகனின் மனதை காயமடையச் செய்வதாக அமைந்துள்ளது.

சமூக வலைதளங்களில் தற்போது ‘சில் திதி சில்’ என்ற வீடியோ வைரலாகி வருகிறது. திருமண வரவேற்பு நிகழ்வில் மணமகள் சிவப்பு நிற லெகங்காவும், மணமகன் சூட்டும் அணிந்துள்ளனர்.

திருமண சடங்குகள் தொடங்குகின்றன. அதில் ஐயர் மணமகன் மணமகளுக்கு கொடுக்கக்கூடிய சில இனிப்புகளை கொடுக்கிறார்.அதனை வாங்கி மணமகன் மணமகளுக்கு பர்பியை ஊட்டுகிறார். கோபமடைந்த மணமகள் அதை பிடுங்கி தூக்கி எரிகிறார்.

பூசாரி மணமகளுக்கு ஒரு டம்ராரில் தண்ணீரைக் குடிக்க கொடுக்கிறார். இப்போது மணமகன் கோபமாக இருப்பதால் அதை வாங்க மறுக்கிறார். உடனே மணமகள் அதையும் கோபமாக கூட்டத்தில் தூக்கி எறிந்தார். இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் பதிவிடப்படவில்லை.

இந்த வீடியோ இன்ஸ்டாவில் பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மணமகளுக்கு மணமகனுடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும், திருமண நாளில் இது போன்று சண்டை போட்டுக்கொண்டால் இந்த திருமணம் அதிக நாள் நீடிக்காது என பல்வேறு விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.