
விவோ நிறுவனம் புதிய ஒய்15எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டிருக்கும்.
மேலும் ஃபன்டச் ஓ.எஸ் 11.1-ஐ கொண்டிருக்கும். இந்த போனில் 6.5 இன்ச் ஹெச்.டி+ 20:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளே, octa-core MediaTek Helio P35 SoC பிராசஸர், ஆகியவற்றை கொண்டுள்ளது.
இந்த போனில், f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சாரும், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் சென்சாரும் இடம்பெற்றுள்ளன.
மேலும் 8 எம்.பி செல்ஃபி கேமரா f/2.0 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் பக்கவாட்டில் பிங்கர்பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5,000mAh பேட்டரியும், 10W சார்ஜிங் வசதியும் தரப்பட்டுள்ளன.
இதன் 3ஜிபி ரேம்+ 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.10,990-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மிஸ்டிக் ப்ளூ, வேவ் க்ரீன் வண்ணங்களில் இந்த போன் விவோ இந்தியா இ-ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது