நாகர்கோவில் மாநகராட்சி.. திமுக இளம்பெண் வெற்றி…

Published:

நாகர்கோவில் மாநகராட்சியின் 17ஆவது வார்டு உறுப்பினராக 21 வயது பட்டதாரி கெளசுகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இவரது தந்தை இளஞ்செழியன் திமுகவின் கன்னியாகுமரி மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து கௌசுகி ..
நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றுள்ளேன். எனது தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரியமாக திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். எனது தந்தை மற்றும் தாத்தாவும் திமுக உறுப்பினர்கள். இளம் வயதிலிருந்தே எனக்கு பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் இருந்தது.

kousugi - 2026

எங்கள் வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் நான் போட்டியிட்டேன். நான் பொறுப்பேற்றதும் எங்கள் பகுதியில் சாலை வசதி குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சி செய்வேன் என கூறியுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img