
நான்காவது மாடியில் வசிக்கும் சுமார் 45 வயது பெண் ஒருவர், தன் உயிரை பணயம் வைத்து ஜன்னலை சுத்தம் செய்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தில்லியில் உள்ள ஷிப்ரா ரிவியரா சொசைட்டியில் உள்ள குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதில் நான்காவது மாடியில் உள்ள தனது வீட்டின் மூடிய பால்கனியின் கண்ணாடியை சுத்தம் செய்ய பெண் ஒருவர் முயன்றுள்ளார். இதற்காக பால்கனியின் ஓரத்தில் திடீரென வெளியே வந்தார்.
ஒரு கையால் பிடித்தப்படியும் மற்றொரு கையால் வீட்டை சுத்தம் செய்ததும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை அப்பெண்ணி பிளாட்டிற்கு எதிர் பிளாக்கில் வசிக்கும் ஸ்ருதி என்பவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.
பொதுவாக அனைவரும் ஞாயிற்றுக்கிழமைகளின் மதிய உணவு நேரத்தில் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள். திடீரென்று என் ஜன்னலில் இருந்து இந்தப் பெண்ணைப் பார்த்ததும், நான் ஒரு நொடி பயந்துவிட்டேன்.

உடனடியாக நான் என் ஜன்னலைத் திறந்து அவரை பலமுறை அழைத்தேன், ஆனால் அவர் சுத்தம் செய்வதில் மிகவும் பிஸியாக இருந்தார், அவர் நான் கூறியதை கவனிக்கவிலை. அப்படி பால்கனியின் ஓரத்தில் நிற்பது மிகவும் ஆபத்தானது, என்று படம்பிடித்த எதிர்வீட்டு பெண் கூறினார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண்ணுக்கு வேடிக்கையான மற்றும் கிண்டலான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்,
அதே நேரத்தில் சிலர் அவரது வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.ழ
ல