thirupparaithurai swami - 2026

திருப்பராய்த்துறை சுவாமி சதானந்த மகராஜ் மகாசமாதி அடைந்தார்!

சற்றுமுன் Featured திருச்சி
thirupparaithurai swami - 2026

திருப்பராய்த்துறை சுவாமி சதானந்த மகராஜ் மகாசமாதி அடைந்தார். திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன தலைவரும் சுவாமி சித்பவானந்தரின் மூத்த சீடர்களில் ஒருவருமான ஸ்ரீமத் சுவாமி சதானந்த மகராஜ் நேற்று மாலை 5.30 மணி அளவில் மகா சமாதி அடைந்தார். அவரது அந்திம சம்ஸ்காரங்கள் இன்று மாலை 3.30க்கு திருப்பராய்த்துறை தபோவனத்தில் நடைபெறுகிறது.

சுவாமிகள் மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி தபோவன செயலராக, தலைவராக தொண்டு செய்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அந்த யோகம் நடத்தி ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.