பாய்மர படகை ராணுவ பெண் அதிகாரிகள் இயக்கி சாதனை!

Published:

ship - 2026

இந்திய வரலாற்றில் முதன்முறையாக சென்னை முதல் விசாகப்பட்டினம் வரையில் பாய்மர படகை ராணுவ பெண் அதிகாரிகள் இயக்கி சாதனை படைத்துள்ளனர்.

சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வரை சுமார் 1,700 கிலோ மீட்டர் தூரம் வரையில் பாய்மர படகு மூலமாக சென்று மீண்டும் சென்னை துறைமுகத்திற்கு வந்த பெண் அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சென்னை துறைமுகத்தில் கடந்த 15ம் தேதி பயணத்தை தொடங்கிய 10 பேர் அடங்கிய குழுவினர் சுமார் 8 நாட்களாக கடல் வழியாக விசாகப்பட்டினம் சென்று மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img