IMG 20220224 095143 - 2026

ராமேஸ்வரத்தில் 108அடி உயரத்தில் அனுமன் ‌‌‌சிலை:

சற்றுமுன்

100 கோடி செலவில் ராமேஸ்வரம் கடற்கரையில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கப்பட உள்ளது

இதற்கான பூமி பூஜை யாகசாலை பூஜை நிகழ்ச்சியானது நேற்று ராமேஸ்வரம் ஒலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது.

வடமாநில தொழில் அதிபர் ஸ்ரீநிகில் நந்தா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பளே, ஐ.ஏ.எஸ். அதிகாரி சவுபே ஆகியோர் செங்கல் எடுத்து வைத்து, பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

இப் பணிகள் இரு ஆண்டுகளில் முடியும்
என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா  கூறினார்.மேலும் அவர் தெரிவித்தபோது

IMG 20220224 095143 - 2026

ராமரின் பாதம் பட்ட ராமேஸ்வரம் கோவில் இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய தலமாகும். இந்தியாவில் 4 எல்லைப் பகுதிகளிலும் பிரமாண்ட அனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே அசாம் மற்றும் இமாசல பிரதேசம் மாநிலங்களில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

தற்போது ராமேஸ்வரம் கடற்கரையில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை நிறுவ பூமிபூஜை நடந்துள்ளது. ரூ.100 கோடியில் அமையும் இந்த சிலைக்கான பணிகள் இன்னும் 2 வருடத்தில் முழுமையாக முடியும்.அடுத்தகட்டமாக குஜராத் மாநிலத்திலும் இதே போன்று அனுமன் சிலை நிறுவப்படும். ராமேஸ்வரம் வரக்கூடிய அனைத்து பக்தர்களும் வந்து தரிசனம் செய்யும் வகையில் இந்த சிலை அமைக்கப்படும்
அனுமன் சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஹரிஸ் சந்தர் நந்தா கல்வி அறக்கட்டளை செய்துள்ளது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.