உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்..தமிழர்கள் நாடு திரும்ப உதவி…

ரஷிய படைகளுக்கு அதிபர் புதினின் அதிரடி உத்தரவால்
உக்ரைனில் சூழ்ந்த போர்மேகங்களால் 20 கி.மீ. தொலைவில் ரஷ்யா படைபலத்தை குவித்து
உக்ரைன் மீது மிக கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி யில் உள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் வில், ரஷ்யா குண்டு மழையை இன்று காலை முதல் பொழிய தொடங்கியது.
கிழக்கு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்கி வருகிறது .
உக்ரைனின் முக்கிய நகரமான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர். குண்டுகள் வெடித்ததில் தீப்பற்றி எரிகிறது ஒடேசா துறைமுகம். மேலும் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் கிவ்வில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் முயற்சிசெய்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் வடக்கும் மற்றும் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைன் மீது சைபர் தாக்குதலையும் நடத்தி வருகிறது.

உக்ரைன் மீது சைபர் தாக்குதலையும் தொடுத்துள்ள ரஷ்யா, உக்ரைனைச் சேர்ந்த அரசு இணையதளங்களையும் முடக்கியுள்ளது. தகவல் அழிப்பு, டூல் மால்வேர் மூலம் உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்களின் தகவல்களையும், ரஷ்ய அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கியுள்ளதாகவும், உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்களை சைபர் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்ய படைகள். உக்ரைன் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. ஐந்து ரஷ்ய ஜெட் விமானங்களையும் ஒரு ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தனது ராணுவ நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும், அமைதியான தீர்வு வரும் என நம்புகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவை உலக நாடுகள் தடுக்க வேண்டும். உக்ரைனின் அமைதியான நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது.நூறு வீரர்கள் செத்துமடிந்தனர்
என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திவருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.அமைதியான முறையில் தீர்வு காண வாய்ப்பு கொடுக்க வேண்டும்.என
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினுக்கு, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ் 1,428 புள்ளிகள் சரிந்து தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 16,647 புள்ளிகள் சரிவடைந்தது.

உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது.
044-28515288 /96000 23645 /
99402 56444 இணையதளம் : nrtamils.tn.gov.in தொடர்புகொள்ளலாம்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியதாக கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம்.ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதால்
இந்தியர்களை மீட்க, இன்று காலை டெல்லியில் இருந்து உக்ரைன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஈரான் வான் வெளியில் சுற்றி வந்த நிலையில், பாதி வழியில் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ள நிலையில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி அவசரமாக வெளியுறவு துறை மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார்.

IMG 20220224 125038 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories