December 6, 2025, 11:27 AM
26.8 C
Chennai

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு…

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து சுற்றிவளைத்து இரண்டாவது நாளாக  தாக்கும் நிலையில் உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு இன்று காலை முதல் பாதுகாப்பான இடங்களை ஏற்பாடு செய்து தந்துள்ளதாக இந்திய தூதரகத்தினர் தகவல் தெரிவித்தனர்

உக்ரைனின் கெர்சான் பகுதியில் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதலால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
கருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட போர் கப்பல்களிலிருந்து ஏவுகணை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.மேலும் பெலாரஸ் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்து, பீரங்கிகள் மூலமும் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.பெலாரஸ் நாட்டின் எல்லை வழியாக ரஷ்ய பீரங்கிகள் உக்ரைனுக்குள் நுழைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமியில் கடும் சண்டை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் தாக்குதலால் நூற்றுக்கணக்கான உக்ரைன் ராணுவ வீரர்கள் பொதுமக்கள் உயிரிழப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளன.உக்ரைன் மீதான ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் பாதுகாப்பு தேடி பாதாள அறைகளில்  உக்ரைன் மக்கள் தஞ்சம் அடையும் சூழல் உருவானது.

இந்தநிலையில் உக்ரைனில் உள்ள சில இந்திய மாணவர்களுக்கு இன்று காலை முதல் பாதுகாப்பான இடங்களை ஏற்பாடு செய்து தந்துள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது.மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உதவி வருவதாக கூறப்படுகிறது.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க, ஹங்கேரி இந்திய தூதரக உறுப்பினர்கள் குழு, ஜொகானி எல்லைப்பகுதிக்கு சென்றது.
உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களை, அண்டை நாடான ஹங்கேரி வழியாக நாட்டிற்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது என கூறுகின்றன.

இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள முதன்மை ரஷ்ய வங்கிகளின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படுகிறது.டாலர், யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட நாணயங்களில் ரஷ்யா வணிகம் செய்ய வரையறை செய்யப்பட்டுள்ளது.

போரை தேர்ந்தெடுத்த ரஷ்யாவும், அந்நாட்டு அதிபர் புதினும் அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்.என்ற எண்ணத்தில்
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. மேலும் அந்நாட்டு வங்கிகளான விடிபி., உள்ளிட்ட 4 வங்கிகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுகிறது.ரஷ்யாவின் சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை.அவர் முன்னாள் சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ வவிரும்புகிறார். அவரது இந்த லட்சிய போக்கு, உலக நாடுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று நான் நினைக்கிறேன்.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவின் பக்கம் உள்ளதா என நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‛இதுகுறித்து இந்தியாவுடன் கலந்தாலோசித்து வருகிறோம்’ என ஜோ பைடன் கூறியுள்ளார்.இந்தநிலையில்
ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் கூறியுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு காலத்தின் கட்டாயம் என ரஷ்ய அதிபர் புதின் கருத்து‌கூறியுள்ளார்.போரின் முதல் நாளில் குறிப்பிட்ட இலக்குகளை எட்டி விட்டதாக அவர் கூறினார்.
முதல் நாள் சண்டையில், 137 உக்ரைன் வீரர்கள் மக்கள்  உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் இன்று தெரிவித்துள்ளார்.

46027855 E99D 4216 BD6C 6F353F9BFF98 - 2025
Ukraine1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories