monkey 3 - 2026

தோளோடு தோள் சேர்ந்த தோழமை: பூனையும் குரங்கும்.. வைரல் வீடியோ!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
monkey 3 - 2026

சமூக வலைதளங்களில் விலங்குகளின் வீடியோ வைரல் ஆவது வாடிக்கை. அப்படி தற்பொழுது பூனை குரங்கின் வீடியோ வைரலாகி வருகிறது.

பெரும்பாலான வீடுகளில் வளரும் பூனைகளுக்கும் நாய்க்கும் ஏழாம் பொருத்தம் தான். இதனால், பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும். குட்டிகள் இருந்தால் அதனோடு விளையாடும்.

எதிர்வீட்டு பூனையாக இருந்தால் கூட, பூனைக்கு பிடிக்காது. இப்படி எங்கு பார்த்தாலும் எதிரிகள் சூழ் உலகாக இருக்கும் பூனைக்கு நண்பனாக குரங்கு குட்டி ஒன்று கிடைத்திருப்பது இயற்கையின் ஆச்சரியம்.

ஒரே இடத்தில் வாழும் அவையிரண்டும் தோள் மீது தோள் கை போட்டுக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுகின்றன. கை என எதைக் குறிப்பிடுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம்.

குரங்கின் முன்னங்காலின் ஒன்றை பூனை மீது போட்டுக் கொள்கிறது. அப்படியே, இரண்டும் இயற்கை வெளியில் உலா வருகின்றன. இந்த அற்புதமான காட்சியை ஒருவர் அழகாக படம்பிடித்து இணையத்திலும் பதிவேற்றியிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் குரங்கும் பூனையும் தோழர்களா? என ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். கியூட்டாக இருக்கும் இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.