மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா கொடியேற்றம்!

mandakadu bhagavathi - 2026

குமரி மாவட்டம், மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா பிப்,27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டது.

இதில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட பாஜக பொருளாளர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கேரளம் மாநிலத்தில் இருந்தும் இருமுடி கட்டி வந்த பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மார்ச் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில், 6 ஆம் திருவிழாவான வெள்ளிக்கிழமை(மார்ச்.4) அன்று வலிய படுக்கை பூஜையும், 9 ஆம் திருவிழாவான மார்ச் 7 ஆம் தேதியன்று இரவு பெரிய சக்கர தீ வெட்டி ஊர்வலமும், நிறைவு நாளான மார்ச் 8 ஆம் தேதி இரவு 11 மணி முதல் 12 மணி வரை ஒடுக்கு பூஜையும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories