திமுகவால் அதிமுகவை ஒருபோதும் அசைக்க முடியாது…செல்லூர் ராஜூ

Published:

அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது தி.மு.க., வனவாசம் இருந்ததை மறக்கக்கூடாது. ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்களாகியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.
என மதுரையில் தி.மு.க., அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது,
அ.தி.மு.க.,வை ஒழிக்க நினைத்தவர் கருணாநிதி. அவரது அடக்குமுறையை எதிர்த்து வளர்ந்தது தான் இக்கட்சி. அ.தி.மு.க., மீது பொய் வழக்கு போட்டால் முடங்கி விடும் என நினைப்பது பகல் கனவாகும். அதற்கு கருணாநிதியே சாட்சியாகும்.அதிமுக மீது தி.மு.க அரசு போடும் ஒவ்வொரு வழக்கையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வழக்கு எல்லாம் எங்களுக்கு ‘ஜூஜுபி’. எதற்கும் அஞ்ச மாட்டோம்,”
ஜனநாயக முறைப்படி தற்போது அ.தி.மு.க.,வில் இருவரை தேர்வு செய்து தலைமை ஏற்க வைத்துள்ளோம் என நான் கூறியதை ‘அ.தி.மு.க.,வில் தலைமை இல்லை’ என தி.மு.க., அரசு மாற்றி செய்தி வெளியிட வைத்தது.

images 14 - 2026

தி.மு.க.,வில் அ.தி.மு.க., இணையும் என ஒரு அமைச்சர் கூறுகிறார். இப்படி ஆணவத்துடன் பேசிய பலர் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. அ.தி.மு.க., இருக்காது என முன்னாள் மத்தியமைச்சர் மு.க.அழகிரி கூறினார். இன்று அவர் இருக்கும் இடம் தெரியவில்லை என்றார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img