Duck - 2026

அட.. ஏமாந்து போன நாய்.. அந்த பக்கம் ஓட்டம் பிடித்த வாத்து! வைரல்!

சற்றுமுன் அடடே... அப்படியா?
Duck - 2026

தங்களின் ஆயுளைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சில விலங்குகள் கையில் எடுக்கும் சமயோசித்த முடிவுகள் காண்போரை வியக்க வைக்கும்.

அவற்றில் சில விலங்குகள் அல்லது பறவைகள் எடுக்கும் தந்திரமான முடிவுகள் மனிதர்களையே ஆச்சர்யப்படுத்தும். அப்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது, வேட்டையாட காத்திருக்கும் நாயிடம் இருந்து வாத்து சமயோசித்தமாக சிந்தித்து தப்பிக்கிறது.

வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் நாயின் காலுக்கு அடியில் படுத்திருக்கும் வாத்து, இறந்தது போல் நடிக்கிறது. நாயும் வாத்து இறந்துவிட்டதாக எண்ணி, அதனை சீண்டாது.

சிறிது நேரம் கழித்து நாய் அந்த இடத்தைவிட்டு ஒரு சில அடிகள் நகர்ந்ததும், ஜெட் வேகத்தில் அங்கிருந்து ஓடுகிறது வாத்து. இந்த வீடியோ காண்போரை அசர வைக்கிறது.

டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ சுமார் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.