திமுக கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு..

Published:

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர் புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்ற நிலையில் நாளை மேயர் தலைவர் துணை மேயர் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ‌இட ஒதுக்கீடு வழங்கி தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி காங்கிரசுக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் பதவிகளும், இ.கம்யூ., மா.கம்யூ., வி.சி.க., மதிமுக., உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மாநகராட்சிகள் அனைத்தும் தி.மு.க., வசம் வந்தன. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில், 132ஐ பெரும்பான்மையுடன் கைப்பற்றி உள்ளது. அதேபோல, மொத்தம் உள்ள 490 பேரூராட்சிகளில், 435 தி.மு.க., வசம் வந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 1,373 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,842 நகராட்சி கவுன்சிலர்கள், 7,604 பேரூராட்சி கவுன்சிலர்கள் மார்ச் 2 இல் பதவியேற்றனர்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

நாளை மார்ச் 4 இல் 21 மேயர், துணை மேயர்; 138 நகராட்சி தலைவர், துணைத் தலைவர்; 489 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் என, மொத்தம் 1,296 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. இப்பதவிகளில் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு மாநகராட்சி துணை மேயர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்க்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர், சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர், 6 நகராட்சி தலைவர், 9 நகராட்சி துணைத் தலைவர் மற்றும் 8 பேரூராட்சி தலைவர், 11 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூ.,: திருப்பூர் மாநகராட்சி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 4 நகராட்சி துணைத் தலைவர், 4 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூ.,: மதுரை மாநகராட்சி துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ம.தி.மு.க ஆவடி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 3 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வி.சி.க கடலூர் துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 7 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ள நிலையில் பிற பதவிகள் அனைத்தும் திமுக வே தன்வசம் வைத்துள்ளது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img