madurai goshaala - 2026

ஜல்லிக்கட்டு மாட்டோட வயித்துல இதெல்லாம் இருந்துச்சாம்..! தேனியில் அதிர்ச்சி!

சற்றுமுன் மதுரை
madurai goshaala - 2026

தேனி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் சாதனை

தேனியை சேர்ந்த சீரஞ்சீவி ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார். இந்த காளை 4 மாதங்களாக இரை எடுக்காமல் , மெலிந்து வந்திருக்கிறது.

இக்காளையை பெரியகுளத்தில் உள்ள தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

காளையை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் பந்து போன்ற பொருள்கள் இருப்பதையறிந்து செவ்வாய்கிழமையன்று கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் உமாராணி, கால்நடை மருத்துவர்கள் அருண், செளபரண்யா மற்றும் விஷ்ணு ஆகியோர் கொண்ட குழு மாட்டிற்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவை சிகிச்சையின்போது பிளாஸ்டிக்கழிவுகள், ஊசி, சாவி போன்ற 35 கிலோ எடையுள்ள பொருள்களை வெளியே எடுத்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் ஜல்லிகட்டு காளை நலமடைந்ததையடுத்து, உரிமையாளருக்கு அறிவுரை வழங்கி, மாட்டை அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.