December 6, 2025, 11:28 AM
26.8 C
Chennai

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Inscription - 2025

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சியைச் சேர்ந்த பாபு , ஜான் மருது ஆகியோர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் ரமேஷ், ஸ்ரீதர் ஆகியோர் பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோயிலில் இரண்டு பழமையான துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கல்வெட்டை மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் உதவியுடன் படி எடுத்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இரண்டு கல்வெட்டுக்களும் கி.பி 700 ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டது.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது : பிற்கால பாண்டிய மன்னர்களின் தலை சிறந்தவர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216- 1238). இவர் சோழர் ஆதிக்கத்தில் இருந்து மதுரையை மீட்ட பெருமைக்குரியவர்.

இவர் ஆட்சி காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு செய்வதற்கு, நந்த தீபம் ஏற்றுவதற்கு, சமய சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு, கோவில் பராமரிப்புகளுக்கும், பல ஏக்கர்களில் நஞ்சை, புஞ்சை நிலங்களை கோயில்களுக்கு (இறையிலி) தானமாக கொடுக்கப்பட்டது.

நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் கோவில் பராமரிக்கப்பட்டது. இவற்றை தேவதானம் என்று அழைப்பர். சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நில தானம் திருநாமத்துக்காணி என்றும், பெருமாள் கோயிலுக்கு வழங்கும் நில தானம் திருவிடையாட்டம் என்றும், சமணம் புத்த பள்ளிக்கு வழங்கும் நில தானம் பள்ளி சந்தம் என அழைக்கப்படும்.

சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தின் உட்பகுதியில் 4.5 அடி நீளம் 1.5 அடி அகலம் 9 வரி கொண்ட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது.

இக்கல்வெட்டில் ஸ்ரீ மாறன் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன் தேவர்க்கு யாண்டு என சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கல்வெட்டு வரிகளுடன் தொடங்கும் கல்வெட்டு ஈஸ்வரமுடைய நாயனார் என்ற சிவன் பெருமாள் கோவிலுக்கு பேரிகை, சங்கு மற்றும் பூஜை செய்வதற்கான நிலங்களை குறியீடு களாகவும், அரை மா, அரைக்காணி, முந்திரி, கீழரை போன்ற நில அளவை முறையும் நிலத்திற்கு தேவையான நீர் பாசன செய்யும் முறையும் பொறிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருவிடையாட்டத்திற்கு கிழக்கெல்லையும், மேற்கு வாய்க்கால்களுக்கு தென்கிழக்கு எல்லையும் திருவிடையாட்டத்திற்கு மேற்கு எல்லை செங்குளத்தில் வடக்கு எல்லை என நிலத்தின் நான்கு எல்லைகளை குறிப்பிட்டு விளைச்சல் பொருள்களை மாகனத் தேவனன் தமிழ்நாட்டரையன் என்பவன் கோவிலுக்கு இவ்வுலகம் உள்ளவரை தானம் வழங்க வேண்டும் குறிப்பிட்டுள்ளது.

கோயிலின் முன்பு குளத்தங்கரையில் 1 அடி அகலம்,4 அடி நீளம், 6 வரி கொண்ட கருங்கலில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது .

நிலத்தின் எல்லை , குளம், இறையிலி போன்ற சொற்கள் இருப்பினும் பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் முழுமையான பொருளை அறிய முடியவில்லை. இக்கல்வெட்டின் எழுத்தை வைத்து இதன் காலம் கி.பி. 13 ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். என்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories