கடலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் அக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தம் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. பல இடங்களை தி.மு.க. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியிருந்தது.
ஆனால், தி.மு.க. போட்டி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற வைத்தனர். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து கடலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பனும் அக் கட்சியில் இருந்து இன்று தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.






