apple iphone - 2026

அதிர்ச்சி: பழுது பார்த்து கொண்டிருக்கும் போது வெடித்த ஆப்பிள் ஐபோன்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்
apple iphone - 2026

ஆப்பிள் ஐபோன் பழுது பார்க்கப்பட்டு கொண்டிருந்த போது திடீரென வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் ஐபோனுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் என்பதும் பல்வேறு வசதிகள் இருப்பதால் இந்த ஐபோனை வாங்க பலரும் விரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொபைல் பழுதுபார்க்கும் கடையில் ஆப்பிள் ஐபோன் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய ஆப்பிள் ஐபோனின் பேட்டரி பெரிதாக இருப்பதாகவும் அதனை சரி செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்

இதனை அடுத்து மொபைல் கடைக்காரர் அந்த ஆப்பிள் போனை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது ஒரு ஆப்பிள் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளதாகவும் ஆப்பிள் ஐபோன் நிர்வாகம் இது குறித்து தகுந்த விளக்கம் அளிக்கும் என்றும் வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.