
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவ.30 ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
டிச.23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்த தேர்தல் தொடர்பான நாட்கள்…
நவ.30 – 13 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல்
டிச.7 – 2ஆம் கட்ட தேர்தல்
டிச.12 – 3வது கட்ட தேர்தல்
டிச.16 – 4ஆம் கட்ட தேர்தல்
டிச.20 – 5ஆம் கட்ட தேர்தல்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நாட்டிலேயே முதன்முறையாக வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.



