மதுரை அரசு சித்திரைப் பொருட்காட்சியை மதுரை மாட்டுத்தாவணிக்கு பதிலாக வழக்கம்போல் தமுக்கம் மைதானத்தில் நடத்த பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி நடைபெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு பக்தர்களுடன் விமர்சியாக நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற உள்ளது. கள்ளழகர் நிகழ்வு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆகியவை இந்த ஆண்டும் பக்தர்களுடன் நடக்க உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவிழாக்கள் நகரான மதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமில்லாது, உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். அந்த நாட்களில் மதுரையே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
திருவிழா லுக் இந்த ஆண்டு பக்தர் களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கூடவே சித்திரை பொருட்காட்சி நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
மதுரையில் அரசு சித்திரை பொருட்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் 40 ஆண்டுகளாக நடந்தது. கொரோனாவால் 2 ஆண்டுகளாக நடத்தவில்லை. அ.தி.மு.க.,அரசு கொண்டுவந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம், கோவை கொடிசியா அரங்குபோல் தமுக்கத்தில் அரங்கம் அமைக்கும் பணி நடக்கிறது. இதை சுட்டிக்காட்டி பொருட்காட்சியை மாட்டுத்தாவணி அருகில் கொண்டு செல்ல தமிழக அரசு, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளன
. அங்கு எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ்டாண்ட், காய்கறி, பூ, பழ மார்க்கெட் உள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.மக்கள் பொருட்காட்சியை காண வெகுதுாரம் செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கள்ளழகர் எதிர் சேவை, வைகையில் எழுந்தருளல், பூப்பல்லாக்கு, தசாவதாரம் தமுக்கம் அருகே நடைபெறும்.அங்கு கட்டுமான பணி நடைபெறும் இடத்தைத் தவிர, பொருட்காட்சி நடத்த போதிய இட வசதி உள்ளது. தமுக்கத்தில் பொருட்காட்சி நடத்த பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதே கோரிக்கையை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.





