காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கவசம்!

kamatchi - 2026

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியக் கற்கள் பதித்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கவசத்தை காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஹைதராபாத்தை சோந்த பக்தர் ஒருவர் ரூ.5 கோடி மதிப்பிலான வைரம், வைடூரியம், மரகதக்கற்கள் பதித்த தங்கக் கவசத்தை காணிக்கையாக வழங்கியிருந்தார்.

கிரீடம் முதல் பாதம் வரை உள்ள இந்த தங்கக் கவசத்தை காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில் வைத்து சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார்.

இதையடுத்து, தங்கக்கவசம் வெள்ளி சிம்மாசனத்தில் வைக்கப்பட்டு, காமாட்சி அம்மன் மாதிரி வடிவம் போன்று வடிவமைக்கப்பட்டு, ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.

சங்கரமடத்திலிருந்து மங்கள இசையுடன் புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக காமாட்சி அம்மன் கோயிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் அயோத்தி ராமஜென்மபூமி அறக்கட்டளைப் பொருளாளர் கோவிந்தகிரி, ஹைதராபாத்தை சேர்ந்த தங்கக்கவச உபயதாரர், தொழிலதிபர்கள் மும்பை சங்கர், புணே காலே, கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் முரளி, சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி ஆா்.நந்தகுமார், காஞ்சிபுரம் நகர் வரவேற்புக்குழுத் தலைவர் டி.கணேஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் பூத்தட்டுகளுடன் ஊா்வலத்தில் வந்தனர்.

தங்கக்கவச ஊா்வலம் கோயிலுக்கு வந்து சேர்ந்ததும், மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, தங்கக் கவசத்தை அம்மனுக்கு சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories