காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மனுக்கு, ரூ5 கோடி மதிப்புள்ள தங்கக் கவசத்தை விஜயேந்திரர் சுவாமி இன்று அணிவித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியம் பதித்த ரூ5 கோடி மதிப்பிலான தங்கக் கவசத்தை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர்சுவாமி அணிவித்தார். ஆந்திர மாநில பக்தர் ஒருவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு கீரீடம் முதல் பாதம் வரை வைரம், வைடூரியம், நவரத்தின கற்கள் பதித்த ரூ5 கோடி மதிப்பிலான தங்கக் கவசத்தை சமர்ப்பித்தார்.
இந்த நகைகள், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு மங்கள மேள வாத்தியங்களுடன் காஞ்சி காமகோட பீடாதிபதி விஜயேந்திரர் சுவாமி தலைமையில் எடுத்து செல்லப்பட்டது. அங்கு, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, விஜயேந்திரர் அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவித்தார்.
பக்தர்கள் திரளான வர்கள் தரிசனம் செய்தனர்.







