202203150829461710 Tiruvarur car festival started SECVPF - 2026

ரதவீதிகளில் ஆடி அசைந்துவந்த திருவாரூர் ஆழி தேர்… பக்தர்கள் தரிசனம்..

சற்றுமுன்

ஆசியாவில் மிகப்பெரிய தேர் திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டம் இன்று பக்தி பரவசத்துடன் துவங்கி நடைபெற்றது.
சைவ தலங்களில் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். சைவ மரபில் பெரிய கோவில் என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு சொந்தமான தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர்.

கடல் போன்ற மக்கள் வெள்ளத்திற்கு இடையில் ஆடி அசைந்து வருவதால் ஆழித்தேர் என சமயக் குறவர்களால் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோரும் நடைபெறும் இத்தேரோட்டம் இந்த ஆண்டு இன்று நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேர் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் அரசின் இதர துறையினரும் இணைந்து செய்தனர்.
பிரசிதிப்பெற்ற இத்தேரோட்டத்தால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரிகிருஷ்ணன், என ன்ன் உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதனை பச்சைக்கொடி காட்டியவுடன் ஆரூரா! தியாகேசா!! என விண்ணதிர முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். இந்நிகழ்வில் திருப்புகழூர் வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொண்டனர். 

ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து அசைந்து ஆடி வீதிகளில் வந்த ஆழி தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசனம் செய்து தியாகராஜரை பிரார்த்தனை செய்தனர்.

202203150829461710 Tiruvarur car festival started SECVPF - 2026
IMG 20220315 WA0000 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.