வந்தாச்சு புதிய அப்டேட்! 15 நிமிடம்.. கூகுள் அறிவிப்பு!

google - 2026

ஆப்பிள் ஐஃபோன்களில் உள்ள ஐ ஓ.எஸ் சிஸ்டத்திற்கான புதிய சிறப்பம்சமாக பயனாளர்களின் சமீபத்திய 15 நிமிடங்களுக்கான சர்ச் ஹிஸ்டரியை அழிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

ஆப்பிள் ஐஃபோன்களைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனம் இந்த சிறப்பம்சத்தை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் வழங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

`தி வெர்ஜ்’ என்ற ஆங்கில இணையதளம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது, கடந்த 2021ஆம் ஆண்டின் மே மாதம், கூகுள் நிறுவனம் ஆப்பிள் ஐஃபோன்களுக்கான இந்த சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தியது.

கடந்த 2021ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தின் ஐஃபோன்களில் உள்ள கூகுள் செயலியில் இந்த சிறப்பம்சம் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து, கூகுள் நிறுவனம் இந்தச் சிறப்பம்சத்தை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்துவதாக கூறியிருந்தது.

எனினும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கூகுள் நிறுவனம் இந்த சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தவில்லை என்ற போது, இது தற்போது வெளியிடப்படவுள்ளது.

இதே சிறப்பம்சம் கூகுள் நிறுவனத்தின் வெப் செயலிகளுக்கும் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி, ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் முதலான சிஸ்டங்களில் இயங்கும் ஸ்மார்ட்ஃபோன்களில் மட்டுமே கூகுள் தளத்தில் சமீபத்திய 15 நிமிடங்களுக்கான தேடுதல் ஹிஸ்டரியை அழிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் கூகுள் செயலியின் மூலமாக நீங்கள் தேடியவற்றின் சமீபத்திய 15 நிமிடங்களுக்கான பதிவுகளை அழிக்கும் சிறப்பம்சமாக இதனை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

15 நிமிடங்களுக்கு முந்தைய பதிவுகள் அழியாமல் இருப்பதால், அதற்கு முந்தைய பதிவுகள் தானாகவே அழிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களிலும், ஐஃபோன், ஐபேட் ஆகியவற்றிலும் இந்த சிறப்பம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?

  1. உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் கூகுள் செயலிக்குச் செல்லவும்.
  2. மேற்பக்கத்தின் வலது புறத்தில் இருக்கும் `ப்ரொஃபைல்; ஐகானை அழுத்த வேண்டும்.
  3. அதில் ‘Delete last 15 minutes’ என்ற பட்டனை அழுத்திய பிறகு, சமீபத்திய 15 நிமிடங்களுக்கான தேடுதல் ஹிஸ்டரி அழிக்கப்படும்.

இந்த சிறப்பம்சம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வரை, கூகுள் செயலியில் 3 மாதங்கள், 18 மாதங்கள், 36 மாதங்கள் ஆகிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பதிவுகளை அழித்துக் கொள்ளும் வசதி மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories