ஆறுமுகச்சாமி ஆணையம் முன் ஓபிஎஸ் ஆஜர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையம் முன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆஜராகியுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இரண்டேமுக்கால்ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது.

images 96 - 2026

சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் என 154 பேரிடம் ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ள நிலையில் சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட அப்பல்லோ டாக்டர்களிடம் மறு விசாரணை நடத்தியது. இவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை மேற்கொண்டது.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பெரும்பாலான நாட்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்தவர்களில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவராவார்.

இதன்காரணமாக இந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த ஆணையம் ஏற்கனவே முடிவு செய்தது. விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஓ.பன்னீர் செல்வத்திற்கு பல முறை ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், பல முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகாமல் இருந்தார்.

இதற்கிடையில், வழக்கு விசாரணை தொடர்பாக திங்கட்கிழமை இன்று ஆணையத்தின் முன் ஆஜராகும்படி ஆறுமுகசாமி ஆணையம் 9-வது முறையாக சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது .

எதற்காக ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது கூட தெரியாதுஎன ஓபிஎஸ் ஆணையம் முன்பு கூறினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார்? எதன் அடிப்படையில் ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைப்பு என ஆறுமுகசாமி ஆணையம் பதில்கூறியது.

விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் கையெழுத்திட்டேன்.

ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22ல் எதனற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரியாது. மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது சொந்த ஊரில் இருந்தேன்.என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எந்த சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்பது குறித்து எதுவும் எனக்கு தெரியாது.

மருத்துவமனையில் தலைமை செயலாளரிடமே கேட்டறிந்தேன் என ஒ.பி.எஸ் வாக்குமூலம் அளித்தார்.

அதேபோல், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் இன்று ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகியுள்ளார். அவரிடமும் விசாரணை நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories