run youth - 2026

தினமும் 10 கிலோமீட்டர் ஓடி வீட்டிற்கு செல்லும் இளைஞர்! ஏன் தெரியுமா.‌.?

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
run youth - 2026

தினமும் 10 கிலோமீட்டர் ஓடி வீட்டிற்கு செல்லும் இளைஞரின் வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது

நொய்டாவில் ஒரு இளைஞர் தனது தோளில் பையை மாட்டிக்கொண்டு சாலையில் ஓடுகிறார். எழுத்தாளரும், இயக்குனருமான வினோத் காப்ரி தனது காரில் வா நான் உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறுகிறார்.

ஆனால் அந்த இளைஞர் வேண்டாம் என கூறி விட்டு தொடர்ந்து ஓடுகிறார். அவரது பெயர் என்ன என்று கேட்டபோது, ​​பிரதீப் மெஹ்ரா என்று கூறினார். ஏன் இப்படி ஓடுகிறீர்கள் என்று கேட்டதற்கு பிரதீப் ஆச்சரியமான பதில் அளித்தார்.

இப்போது எனக்கு ஓட வேண்டிய நேரம், ராணுவத்தில் சேர வேண்டும். அதனால்தான் இப்படி ஓடுவதாக பிரதீப் பதிலளித்தார். காலையில் தானே ஓடவேண்டாம் என்று வினோத் கேட்டபோது, ​​சமைக்கவும் வேலைக்குப் போகவும் நேரம் சரியாக உள்ளது என்று பிரதீப் கூறினார்.

வினோத் ஓடிக்கொண்டிருந்த பிரதீப்பை காரில் துரத்திச் சென்று பிரதீப்பின் வீட்டு வேலைகளைப் பற்றிக் கேட்டபோது தனது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது மூத்த சகோதரருடன் தங்கியுள்ளார். லிப்ட் வாங்கி சென்றால் பயிற்சி நின்றுவிடும் என பிரதீப் கூறினார்.

இதுகுறித்த வீடீயோவை ட்விட்டரில் வினோத் காப்ரி பகிர்ந்த பின்னர் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோடா பகுதியை சேர்ந்தவர் பிரதீப் மெஹ்ரா( 19) பிரதீப் மெக்டொனால்டு ஊழியர் ஆவார்.

தன்னுடைய வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பணி முடிந்து வீடு திரும்பும் போது பிரதீப் மெஹ்ரா தினமும் 10 கிமீ ஓடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.