நகர்புற உள்ளாட்சி காலியாக உள்ள பதவி இடங்களுக்கு மார்ச்26-ல் மறைமுகத் தேர்தல்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு வருகிற 26-ந்தேதி சனிக்கிழமை நகராட்சி, பேரூராட்சி மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் சி.சி.டி.வி. பதிவு மற்றும் போலீஸ் பாதுகாப்போடு அமைதியான முறையில் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு மாநில தேர்தல் செயலாளர் சுந்தரவல்லி முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மறைமுக தேர்தல்களை அமைதியான முறையில் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடத்தப்படாமல் உள்ள தலைவர், துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு இவ்வாணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் மற்றும் தேர்தல் பார்வையாளரை நியமனம் செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

மறைமுகத் தேர்தல்கள் நடைபெறும் இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிப்பது, மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நாளை (23-ந்தேதி) தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் அமைதியாக நடத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

வருகிற 30-ந்தேதி (புதன் கிழமை) நடைபெற உள்ள வார்டு குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் மற்றும் 31-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ள வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள், நியமனக்குழு உறுப்பினர்கள், ஒப்பந்தக்குழு உறுப்பினர் மற்றும் நிலைக் குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் சி.சி.டி.வி. பதிவு, காவல்துறையினரின் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதை உறுதி செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories