இன்று மார்ச்22 உலக தணணீர் தினம்…

இயற்கையின் வரப்பிரசாதமான நீரின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்வதற்காக கடந்த 1993-ம் ஆண்டு முதல் மார்ச் 22-ந்தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடும் நிலையில்
இந்த ஆண்டுக்கான உலக தண்ணீர் தினம் ‘நிலத்தடி நீர்: கண்ணுக்கு தெரியாததை காணச்செய்தல்’ என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.

தண்ணீரின் தேவையை உணர தவறினால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் புள்ளி விவரங்களுடன் கூறுகின்றனர். குறிப்பாக உலக அளவில் 5-ல் 1 குழந்தை தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். அதேபோல், ஆசியாவில் 15.5 கோடி குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சியான பகுதிகளில் வசிக்கிறார்கள். நாட்டில் 6.85 கோடி மக்கள் போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் வசிப்பிடங்களில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர். இதேநிலை தொடரும் பட்சத்தில், உலகில் வரும் 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 570 கோடி மக்கள் ஒரு ஆண்டில் ஒரு மாதமாவது தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படுவார்கள் என ஐக்கிய நாட்டு சபை எச்சரித்துள்ளது.நீரின்றி அமையாது உலகு’ என்பது திருவள்ளுவர் வாக்கு. பொதுமக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். தண்ணீரில் இருந்துதான் உலகில் உயிரின தோற்றங்கள் உருவாகியது என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றுள்ளது. அந்தளவுக்கு தண்ணீரின் தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது. தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி கடந்த 1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாட்டு சபை மாநாட்டில் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

உலக நீர் தினத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, வருகிற 2030-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் தரமான நீர் மற்றும் சுகாதாரத்தை வழங்குவதாகும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அத்தியாவசிய தேவைகள், பாரம்பரியம்கலாசாரம், பொருளாதாரம், ஆரோக்கியம், கல்வி, வளர்ச்சி என சுற்றுச்சூழலுடன் தண்ணீர் ஒன்றியிருப்பதால் தண்ணீரை பாதுகாக்கவும் போற்றவும் மக்களுக்கு தெரியவேண்டும் என்ற கருத்துடன் உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

images 2022 03 22T104336.946 - 2026
images 2022 03 22T104409.570 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories