images 96 1 - 2026

ஆறுமுகச்சாமி ஆணையத்தில் இன்று ஓபிஸ் அளித்த வாக்குமூலம்…

சற்றுமுன்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 2-வது நாளாக ஆஜரான ஓ. பன்னீர்செல்வம்,தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்பட மூன்று தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலிதாதான் என்றும்ஜெயலலிதா வுக்கு எதிராக சசிகலா அவரது உறவினர்கள் எந்த சதித்திட்டம் ஏதும் தீட்டவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

images 96 1 - 2026

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தின் முன் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று ஆஜரானார். அப்போது சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜெயலலிதா தொடர்பாக பல்வேறு வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்பட மூன்று தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலிதாதான் என்றும், இடைத்தேர்தலுக்கான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்குத் தெரியும்.ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது.ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்தார்.சசிகலா கூறியதை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன், பொதுவெளியில் எங்கும் பேசவில்லை.
அரசு அலுவல்கள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதா வுக்கு எதிராக சசிகலா அவரது உறவினர்கள் எந்த சதித்திட்டம் ஏதும் தீட்டவில்லை என்று
ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகச்சாமி ஆணையம் விசாரணையில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.