ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, பதிலளிக்காமல் நிதியமைச்சர் பேப்பரை தூக்கி வீசிவிட்டு வெளியேறியது சபையின் கண்ணியத்திற்கு குறைவான து என்பதால் சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளயேறியதாகஎதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கேள்வி பதில் நேரம் முடிந்த உடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் ஆகியோர் பேசினர்.
தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். சபாநாயகர் அனுமதி மறுக்கவே அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சலும் குழப்பமும் நேரிட்டது. சில நிமிடங்களில் சட்டசபையில் இருந்து எம்எல்ஏக்கள் வெளிநடப்புழ செய்தனர்.
சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், விருதுநகரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக அறிவித்தார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
விருதுநகர் சம்பவத்தை மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினமும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இன்றைக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி சட்டசபையில் பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்தநிலையில்
அவமானப்படுத்தினால் எங்களால் சட்டசபையில் உட்கார்ந்து இருக்க முடியாது என இன்று தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் நிருபர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது,
ஆஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, பதிலளிக்காமல் நிதியமைச்சர் பேப்பரை தூக்கி வீசிவிட்டு வெளியேறினார். சபையின் கண்ணியத்திற்கு குறைவாக இருந்ததாலும், திட்டமிட்டு வெளியேறி எதிர்க்கட்சிகளை அவமானபடுத்தியதாக நாங்கள் வெளிநடப்பு செய்தோம்
அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துகளை ஏற்க அவர் மறுக்கிறார். பன்னீர்செல்வம் கருத்துக்கு பதிலளித்திருக்க வேண்டும். சட்டசபையில் அவமானபடுத்தும்போது எப்படி அமர முடியும். பொது மக்களின் பிரச்னைகள், எண்ணங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு எதிர்க்கட்சிகள் கொண்டு வரும். சபாநாயகர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.






